சித்த மருத்துவர் வீரபாபுவின் கொரோனாவுக்கு மருந்து கசாயம்!

 சித்த மருத்துவர் வீரபாபுவின்

கொரோனாவுக்கு மருந்து கசாயம்!


ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம் துணையோடு இந்த வைரஸின் பாதிப்பிலிருந்து மக்கள் எளிதாக மீளலாம். அதற்கு நாம் உண்ணும் உணவோடு சில மருந்துகளையும் உட்கொள்ள வேண்டும்.

நுரையீரலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும்
  1. ஆடாதொடை 5 இலைகள்,
  2. சிற்றரத்தைச் சிறிதளவு,
  3. அதிமதுரம் சிறிதளவு,
  4. மிளகு 5,
  5. திப்பிலி 2
ஆகியவற்றை எடுத்துக்கொண்டு கசாயம் தயாரிக்க வேண்டும். இந்தக் கசாயத்தை வெறும் வயிற்றில் காலை நேரத்தில் பருக வேண்டும்.

10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 20மிலியும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு 60மிலியும் கொடுக்கலாம்.

மதிய உணவில் இஞ்சி, பூண்டுகளை அதிகம் சேர்த்து புதினா, கொத்தமல்லி துவையல் செய்து சாப்பிடலாம். மாலையில், தூதுவாளை, மஞ்சள், சீரகம், மிளகு ஆகியவற்றை கொண்டு தூதுவாளை சூப் செய்து பருகலாம்.

அடுத்து, வாரத்தில் ஒருநாள் வாழைத்தண்டை சாப்பிட வேண்டும். வாரம் ஒரு முறை நிலவேம்பு கசாயம் குடிக்கலாம். சித்த மருத்துவக் கடைகளில் கபசூர குடிநீர், விஷ சூர குடிநீர் விற்கப்படும். அதையும் பருகினால், உங்கள் அருகே கொரோனா வைரஸ் வர பயப்படும். சளி, காய்ச்சல் இருந்தால் சித்த மருத்துவர்கள், ஆங்கில மருத்துவர்கள் ஆகியோரின் ஆலோசனைப்படி மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் ஆங்கில மருத்துவத்தில் நோய் குறித்த ஆய்வுகள் அதிகம். சித்த மருத்துவத்தில் நோய் தடுப்பு குறித்த மருந்துகள் அதிகம்.

சித்த மருத்துவத்தையும் ஆங்கில மருத்துவத்தையும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஒரே நேரத்தில் சாப்பிடுவதால் பக்க விளைவுகள் வராது. ஆனால், சித்த மருத்துவத்துக்குச் செல்வதற்கு முன் அவர்கள் உண்மையான சித்த மருத்துவர்களா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

0 Comments