இளநீர்(Tender Coconut)
மருத்துவகுணங்கள்
மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர். சுத்தமான சுவையான பானம். இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என
பல்வேறு வகைகள் உள்ளன. இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள்
நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும்
மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும்
நிலையில் அதைச் சரி செய்யும்.
- உடலில் ஏற்படும் நீர் நீக்கத்தை சரிசெய்வதற்கு இளநீரை பருகுவது நல்லது.
- வளர்ச்சியை ஊக்குவிக்கும் கரிமப்பொருட்கள் இளநீரில் உள்ளன.
- இளநீர் குடல்புழுக்களை அழிக்கின்றது.
- காலரா நோயாளிகளுக்கு இளநீர் நல்லதொரு பானம்.
- சிறுநீரக நோய்களை கட்டுப்படுத்துகிறது.
- ஊட்டச்சத்து குறைபாடுகளை சரிசெய்கின்றது.
- சிறந்த சிறுநீர் பெருக்கி.
- சிறுநீரக கற்களை கரைக்க உதவுகின்றது.
- சிறுநீரக கிருமி நீக்கியாக செயல்படுகின்றது.
- இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதற்கு உதவுகின்றது.
ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக்
குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல
மருந்து. உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக்குறையை (Electoral
Imbalance) இளநீர் சரி செய்கிறது.
இளநீர் குடல் புழுக்களை
அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா
நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில்
உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை (Vein) மூலம் செலுத்தலாம்.
இளநீர் மிக மிகச் சுத்தமானது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த
மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள
நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது. இளநீரிலிருந்து
தயாரிக்கப்படும் "ஜெல்' என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து.
இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. சர்க்கரைச் சத்துடன் தாதுப்
பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ்,
இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன.
இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது.
இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத்
தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே
சாப்பிடவேண்டும்.
0 Comments
எனது மருத்துவ குணங்கள் வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி. உங்கள் ஆலோசனை கேட்க ஆவலாக உள்ளோம்.