செலரி தண்டு(Celery)
செலரி என்ற கீரை வகையானது சீனாவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நம் ஊரில் கொத்தமல்லியை உணவில் பயன்படுத்தப்படுவதைப்போல இந்த செலரி கீரை சீனாவில் பயன்படுத்தப்படுகிறது.
செலரியின் மருத்துவக் குணங்களுக்காகத் 300 ஆண்டுகளாகவே உலகம் முழுவதும் தோட்டங்களில் வளர்க்க ஆரம்பித்துள்ளனர். தற்போது இந்தியாவிலும் இந்த கீரை அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. செலரியின் இலை, இலைத் தண்டு, இலைக் காம்பு முதலியவை உணவாக பயன்படுத்தப்படுகின்றன. சாலட்களிலும், காலிப்ளவர், காளான் மஞ்சூரியன் உணவுகளிலும் அதிகம் சேர்க்கப்படுகிறது.
செலரியின் மருத்துவக் குணங்களுக்காகத் 300 ஆண்டுகளாகவே உலகம் முழுவதும் தோட்டங்களில் வளர்க்க ஆரம்பித்துள்ளனர். தற்போது இந்தியாவிலும் இந்த கீரை அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. செலரியின் இலை, இலைத் தண்டு, இலைக் காம்பு முதலியவை உணவாக பயன்படுத்தப்படுகின்றன. சாலட்களிலும், காலிப்ளவர், காளான் மஞ்சூரியன் உணவுகளிலும் அதிகம் சேர்க்கப்படுகிறது.
செலரியில் உள்ள சத்துக்கள்
செலரியில் 88 சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளது, புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, மாவுப்பொருள், தாது உப்புக்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவை காணப்படுகின்றன. இவற்றுடன் வைட்டமின் - ‘ஏ’, வைட்டமின் - ‘பி’ வைட்டமின் - ‘சி’ போன்றவையும் இருப்பதால் இது ஓர் அடிப்படை உணவும் ஆகிறது. செலரியில் மக்னீசியமும், இரும்புச் சத்தும் அதிக அளவில் காணப்படுகின்றன.சாலட் சத்துக்கள்
மிகவும் நறுமணமுள்ள செலரியினை மற்றக் காய்கறிகளுடன் சேர்த்துச் சமைத்தால் மணமும் ருசியும் முன்னணியில் நிற்கும். வெள்ளரிக்காய், தக்காளி, முள்ளங்கி, காரட் போன்றவற்றை சிறு துண்டுகளாக வெட்டிப் போட்டு சாலட் செய்வார்கள். இதில் செலரியின் இலைகளையும், தண்டுகளையும் வெட்டிப் போட்டு எலுமிச்சைச் சாற்றையும் கலக்க வேண்டும். பச்சைக் காற்கறிகள் சேர்த்த இந்த சாலட் சத்துணவாக ஆகிவிடுகிறது.இதயநோய்கள் குணமடையும்
இதயமும், இதயத்திற்குச் செல்லும் நரம்புகளும் தடையின்றி இயங்க மக்னீசியம் கூடுதலாகத் தேவை. அந்தத் தேவையை செலரியில் உள்ள மக்னீசிய உப்புகள் பூர்த்தி செய்துவிடுகின்றன. இதனால் நெஞ்சுவலி, மாரடைப்பு போன்றவை ஏற்படாமல் முன்கூட்டியே தடுக்கப்படுகின்றன. இரத்த சோகை, லூகேமியா முதலிய நோய்கள் உடனே குணமாகின்றன.இரத்த விருத்தியும் விரைந்து ஏற்படுகிறது. செலரியில் உள்ள தாது உப்புக்களால் இரத்தத்தில் புளிப்பு ஏற்பட்டு இரத்தம் கெட்டுவிடுவது தடுக்கப்படுகிறது. அத்துடன் இரத்தத்தில் நஞ்சுப் பொருள்கள் சேர்வதும் தடை செய்யப்படுகிறது. மேலும் கீல் வாதம், ஊளைச் சதை நோய் போன்றவையும் குணப்படுத்தப்படுகின்றன.
0 Comments
எனது மருத்துவ குணங்கள் வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி. உங்கள் ஆலோசனை கேட்க ஆவலாக உள்ளோம்.